செய்திகள்

புதிய நீதியரசராக சிறிபவன் பதவியேற்பு

உயர்நீதிமன்றத்தின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் இன்று மாலை , ஜனபதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார்.

43வது பிரதம நீதியரசராக நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்ற சிராணி பண்டாரநாயக்க நேற்று தனது பதவியில் இருந்து நேற்று விலகிக் கொண்டார்.

இதையடுத்து, புதிய பிரதம நீதியரசராக சிறீபவன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் பிரதம நீதியரசராகப் பொறுப்பேற்கும் மூன்றாவது தமிழர் இவராவார்.

ஏற்கனவே, 1984ம் ஆண்டு தொடக்கம், 1988ம் ஆண்டு வரை சுப்பையா சர்வானந்தா 37வது பிரதம நீதியரசராகவும், 1991ம் ஆண்டில் ஹேர்பேர்ட் தம்பையா 39வது பிரதம நீதியரசராக குறுகிய காலமும் பதவி வகித்திருந்தனர்.

B8mukdgCEAA6Vi4 B8mukdpCAAIQTW8