செய்திகள்

புதிய பராளுமன்றத்தினாலே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் : கபீர் காசிம்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

புதிய ஆரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டிவரும் நிலையில்  நேற்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான ஶ்ரீ கொத்தாவில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாராளுமன்றம் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் அமைக்கப்பட்டது. அந்த பாராளுமன்றத்தை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.  அவ்வாறு கட்டியெழுப்ப வேண்டுமேன்றால் புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.