செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர தெரிவு: அரசியலமைப்பு பேரவை பரிந்துரை

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை புதிய பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை பரிந்துரை செய்துள்ளதாக பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று பிற்பகல் அரசியமைப்பு பேரவை கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
R-06