செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபர் இன்று தெரிவு செய்யப்படுவார்

புதிய பொலிஸ் மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக அரசியலமைப்பு பேரவை இன்று திங்கட்கிழமை கூடி தீர்மானமெடுக்கவுள்ளது.
இதன்படி ஜனாதிபதியினால் பொலிஸ் மா அதிபர் பதவிக்காக பெயர் பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று பேரையும் இன்றைய தினம் அரசியலமைப்பு பேரவையின் முன் சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி  பதில் பொலிஸ் மா அதிபராக தற்போது கடமையாற்றும் எஸ்.எம்.விக்கிரமசிங்க , சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரட்ன ஆகியோர் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கவுள்ளனர்.
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய என்.கே.இலங்கக்கோன் கடந்த வாரம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த இடம்  வெற்றிடமாகியிருந்தததுடன் அதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு பேரவைக்கு குறித்த மூவரின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன. இதன்படி இன்றைய தினம் அவர்களில் ஒருவரை பொலிஸ் மா அதிபராக அந்த பேரவை தெரிவு செய்யவுள்ளது.
இதேவேளை அரசியலமைப்பு பேரவை முறைமையை பின்பற்றி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10