செய்திகள்

புதிய முறைமையில் தேர்தல் நடக்குமாகவிருந்தால் மட்டுமே ’20’ ஐ ஆதரிப்போம் : டலஸ்

அடுத்த பொதுத் தேர்தல் புதிய முறைமையில் நடக்குமாகவிருந்தால் மட்டுமே நாம் 20வது திருத்தத்தை ஆதரிப்போம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு தரப்பு எம்.பியான  டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தை நிறைவேற்ற நாம் முழு ஒத்துழைப்பை வழங்குவோம். இந்நிலையில் ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன 20வது திருத்தத்தை நிறைவேற்றுவோம் ஆனால் பழைய முறைமையிலேயே தேர்தல் நடக்க வேண்டும் என்கின்றனர்.

அப்படியென்றால் ஏன் அவசர அவசரமாக அதனை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்கின்றோம்.
எப்படியும் புதிய முறைமையில் தேர்தல் நடக்குமாகவிருந்தால் மட்டுமே நாம் 20வது திருத்தத்தை ஆதரிப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.