செய்திகள்

புதுக்குடியிருப்பிலும் தமிழின அழிப்பு நினைவேந்தல்! கதறியழுது ஈகைச் சுடரேற்றிய மக்கள் (படங்கள்)

புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தில் இடம்பெற்ற இலங்கையில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் ஈகை சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமாக மக்கள் வெள்ளம் போல் திரண்டு தமது இதயத்து அஞ்சலிகளை செலுத்தினர்.

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் 18-05-2015 நண்பகல் 12 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களும் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களும் மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

இன் நிகழ்வானது மிகவும் உணர்வுப்பூர்வமாக ஈகைச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி என்று அமைந்தது அந்த வேளையில் வடக்கு முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

puthukkudiyiruppu vallipunam (1)

puthukkudiyiruppu vallipunam (2)

puthukkudiyiruppu vallipunam (3)

puthukkudiyiruppu vallipunam (4)

puthukkudiyiruppu vallipunam (5)

puthukkudiyiruppu vallipunam (6)

puthukkudiyiruppu vallipunam (7)

puthukkudiyiruppu vallipunam (8)

puthukkudiyiruppu vallipunam (9)

puthukkudiyiruppu vallipunam (10)

puthukkudiyiruppu vallipunam (11)