செய்திகள்

புதுச்சேரியில் 28 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார் சீமான்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான 28 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துவிட்ட நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைவர் சீமான் நேற்று வெளியிட்டார்.

புதுச்சேரி அண்ணா திடலில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர், திருநங்கை உள்ளிட்ட 28 வேட்பாள்ரகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை தோல்வியடையச் செய்வதே தங்களது நோக்கம் என்று கூறினார்.

N5