செய்திகள்

புதுடில்லி சென்றடைந்தார் மங்கள சமரவீர: சுஷ்மாவுடனும் மோடியுடனும் முக்கிய பேச்சு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இன்று இந்தியா சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர, நாளை பிற்பகலில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார். இதையடுத்து, நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை இந்தியப் பிரதமரின் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தப் பேச்சுக்களில், முக்கியமான பல விவகாரங்கள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ள சிறிலங்கா அதிபரின் இந்தியப் பயணம் குறித்தும் இதன் போது பேச்சுக்கள் இடம்பெறும்.