செய்திகள்

புதுவருட தினங்களான 13,14 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும்

தமிழ், சிங்கள, புதுவருட தினங்களான எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்விரு நாட்களிலும் சட்டவிரோமாக மதுபானங்களை விற்பனை செய்வோரை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்பு தேடுதல்களும் முன்னெடுக்கப்படும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.