செய்திகள்

புது வரவு: பெண் குழந்தையின் நிழற்படத்தை வெளியிட்டார் ஷேன் வாட்சன்

பிறந்து சில நாட்களே ஆன தனது பெண் குழந்தையின் அழகிய நிழற்படத்தை வெளியிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்.
ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் மற்றும் அவரது மனைவி லீக்கும் கடந்த சனிக்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்தது. இருவரும் தங்கள் பெண் குழந்தைக்கு மாடில்டா விக்டோரியா என பெயரிட்டுள்ளனர். அந்த குழந்தையின் சில அழகான நிழற்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு படத்தில் மாடில்டா, மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் வாட்சன் உள்ளார். மற்றோரு படத்தில் வாட்சனின் மகன் வில் தனது தங்கைக்கு முத்தம் கொடுப்பதும் இடம் பெற்றுள்ளது
வாட்சன், குழந்தை பிறக்கும் போது தனது மனைவியுடன் இருபதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியுடன் செல்லவில்லை. ஆனால் விரைவில் வெஸ்ட் இண்டீஸ் சென்று அணியுடன் இணைந்துக்கொள்ள இருக்கிறார்.