செய்திகள்

புதையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி

மன்னார் தாராபுரம் பகுதியில்  ஒருவர் புகையிரதத்துடன் மோதுண்டு பலியாகியுள்ளார்.
இவ் சம்பவம்பற்றி தெரியவருவதாவது
நேற்று ஞாயிறு இரவு 7.15 மணிக்கு கொழுப்பிலிருந்து தலைமன்னாருக்கு சேவையில் ஈடுபட்ட தபால் கடுகதி புகைவண்டி திங்கள் கிழமை அதிகாலை சுமார் 3.15 மணியளவில் மன்னார் தாராபுரம் அருகாமையில் வந்துகொண்டிருந்தபோது ஒருவர் ரயிலில் மோதுண்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இறந்தவர் மன்னார் பெரியமடு காயாநகர் இடத்தைச் சேர்ந்த அபுல் ஹசன் (வயது 34) என அவரின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
இறந்தவர் ஒரு சுயாதீனமற்ற நபர் எனவும் கடந்த நான்கு ஐந்து தினங்களாக மன்னார் பொது வைத்தியசாலையில் தங்கியிருந்து  சிகிச்சை பெற்றபின் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலையிலிருந்து சென்றவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் ரயில்வே வீதியோரமாக சென்றபோதே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இது விடயமாக மன்னார் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
n10