செய்திகள்
புத்தளத்தில் கடத்தப்பட்ட சிறுமி சில மணித்தியாளங்களில் மீட்பு : கடத்தியவர் பிரதேசவாசிகளால் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைப்பு
புத்தளம் பகுதியில் 7வயது மாணவியொருவர் நேற்றைய தினம் இனந்தெரியாத நபரொருவரினால் கடத்தப்பட்ட நிலையில் அந்த மாணவி கடத்தப்பட்டு சில மணி நேரத்தில் பிரதேசவாசிகளினால் மீட்கப்பட்டுள்ளதுடன் கடத்தலுடன் தொடர்புடைய நபர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிந்து வந்த மாணவியை சூட்சுமமான முறையில் ஏமாற்றி காட்டுப்பகுதியொன்றுக்கு அந்த நபர் அழைத்துச் சென்றுள்ள நிலையில் அதனை அவதானித்த பிரதேசவாசிகள் உடனடியாக குறித்த காட்டுப்பகுதிக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அழுதுகொண்டு அவர்கள் பக்கம் பிள்ளை ஓடி வந்துள்ளதுடன் அவ்வேளையில் அங்கு சென்ற பிள்ளையின் தந்தை பிள்ளையை மீட்டு கொண்டுவந்துள்ளார. இதனை தொடர்ந்து சில மணி நேரத்தில் பிரதேசவாசிகள் காட்டுக்குள் மறைந்திருந்த கடத்தலுடன் தொடர்புடைய நபரை பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் இன்றைய தினம் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.