செய்திகள்

புத்தாண்டில் போதையில் வாகனம் செலுத்திய 238 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்

நேற்று 14ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று காலை  6 மணி வரையான 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 238 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக லொரி சாரதிகள் 5  பேரும்  இ.போ.ச பஸ் சாரதி ஒருவரும் , தனியார் பஸ் சாரதிகள் 3  பேரும் ,  வான் சாரதிகள் 9 பேரும் , கார் சாரதிகள் 20  பேரும் , முச்சக்கர வண்டி சாரதிகள் 73 பேரும் , மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 124  பேரும் மற்றும் மற்றைய வாகனங்களின் சாரதிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் மீள வழங்கப்படாது என பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10