செய்திகள்

புத்தாண்டுக்காக நீராடச் சென்ற ஏழு வயது சிறுவன் மரணம்: கனகராயன்குளத்தில் சோகம்

புத்தாண்டு தினத்தில் நீராடச் சென்ற வேளை வவுனியா, கனகராயன் குளத்தில் மூழ்கி ஏழுவயதுச் சிறுவன் ஒருவன் இன்று மரணமடைந்துள்ளான்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தாண்டு தினமான இன்றைய தினம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள ஐயனார் ஆலயத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள கனகராயன் குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவர்களில் ஏழு வயது நிரம்பிய நிதுசன் என்ற சிறுவன் குளத்தில் மூழ்கியுள்ளான். இதனைக்கண்ட ஏனைய சிறுவர்கள் அச் சிறுவனை தம்மால் மீட்க முடியாத நிலையில் இத்தகவலைச் சொல்வதற்காக கனகராயன் குளம் நகரிற்கு சென்று பொதுமக்களை அழைத்து வந்த போதிலும் குறித்த சிறுவனது உயிர் நீரினுள் பறிக்கப்பட்டுள்ளது. மேற்படி சிறுவன் தந்தையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 N5