செய்திகள்

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை தவிர்த்து தொடர் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் (படங்கள்)

முழு நாடே தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அந்த கொண்டாட்டங்களை தவிர்த்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி முன்னெடுக்கும் சத்தியாக்கிரக போராட்டத்தை நேற்றைய தினமும் தொடர்ந்து முன்னெடுத்தனர்.

கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னால் 119வது நாளாகவும் றுகுனு, சப்ரகமுவ, ஜயவர்தனபுர, களனி ஆகிய பல்கலைக்கழகத்திற்கு முன்னால் 48 ஆவது நாளாகவும் நேற்றைய தினம் மாணவர்களின் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்தது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை தமது போராட்டம் கைவிடப்படாது எனவும் இதன்படி புத்தாண்டு கொண்டாட்ங்களையும் தவிர்த்து மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.

jj

jjhh

kelaniya (1)

sabaragamuwa (2)