செய்திகள்
புத்தாண்டு பரிசுகளுடன் மஹிந்தவை பார்க்க செல்ல தயாராகும் ஐ.ம.சு.கூ எம்பிக்கள்
ஸ்ரீ லங்கா சுதந்நதிரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக வரும் 16ம் திகதி தங்காலையிலுள்ள அவரின் வீட்டுக்கு செல்லவுள்ளதாக தெரிய வருகின்றது.
தமிழ் , சிங்கள புத்தாண்டையொட்டியே இந்த எம்.பிக்கள் அவரை சந்திக்க அங்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக காமினி லொக்குகே , குமார வெல்கம , டலஸ் அழகப்பெரும , பந்துல குணவர்த்தன , விமல் வீரவன்ச , வாசுதேவ நாணயக்கார , தினேஷ் குணவர்தன , ஜி.எல். பீரிஸ் , டி.பி.ஏக்கநாயக்க , எஸ்.எம். சந்திரசேன , ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ , மகிந்தாநந்த அளுத்கமகே , சாலிந்த திஸாநாயக்க , சரத் குமார குணரத்ன , ரோஹித்த அபேகுணவர்தன , எஸ்.பி. திசாநாயக்க ஆகியோர் உட்பட 20ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தங்காலைக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.