செய்திகள்

புனிதப் பகுதிகளில் குடியேறியோரை வெளியேற்றுங்கள்! இல்லையேல் தற்கொலைப் போராட்டம்: சிங்கள ராவய

குருநாகல் மாவட்டத்தில் பௌத்தர்களின் புனித பூமி என அடையாளங்காணப்பட்டுள்ள 52 ஏக்கர் காணியிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் தவறினால் தற்கொலை செய்யப்போவதாக சிங்கல ராவய அமைப்பு அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

முன்னைய அரசாங்கம் இங்குள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றியது. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் சிலவற்றை மீளக்கொண்டுவந்து குடியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ராவயவின் தேசிய அமைப்பாளர் வண அக்மீமன தயாரட்ண தேரோ தெரிவித்திருக்கின்றார்.

இரண்டு வாரங்களுக்குள் குறிப்பிட்ட இடங்களிலிருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ள தேரர், தவறினால் தாம் நேரடியாகத் தலையிட வேண்டியிருக்கும், எனவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் தற்கொலை செய்யத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்தார்.

ஜாதிக ஹெல உறுமய இன்றைய அரசாங்கத்தில் இணைந்திருக்கின்ற போதிலும் இந்த விவகாரத்தையிட்டு எதனையும் செய்யாமலிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.