செய்திகள்

புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் இணக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காகசென உருவாக்கப்பட்டுள்ள யாப்பின்படி செயற்படுவதற்கும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதற்கும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் கடுமையான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

“இந்தக் இரண்டு விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ஒரு யாப்பின் பபிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்க வேண்டும் என்றும், அதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இணங்கப்பட்டுள்ளது.

ஆகவே அதனடிப்படையில் ஒரு யாப்பு தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அதாவது கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகளும் என்னென்ன அடிப்படையில் செயற்படுகின்றன என்பது பற்றியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக ஈ பி ஆர் எல் எவ், புளொட், ரெலோ போன்ற கட்சிகள் இணைந்து ஒரு யாப்பையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தமிழரசுக்கட்சிக்கு கொடுத்திருந்தன. ஆனாலும் தமிழரசுக்கட்சி தேர்தல் காலமாக இருந்ததனால் கவணத்தில் எடுத்துக்கொள்ள வில்லை.

இருப்பினும் எதிர் வரம் 7 ஆம் திகதி மீண்டும் கூடி யாப்பின் பிரகாரம் நாங்கள் என்ன செய்ய வேண்டும், மேலதிகமாக எனனென்ன விடயங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரமுடியும் என கூறப்பட்டுள்ளது.

ஆகவே எதிர்வரும் 7ஆம் திகதி சந்திப்பில் இது தொடரபான இறுதி முடிவு எட்டப்படும் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த இரண்டு விடயங்களிலும் கூட்டமைப்பின் எல்லா கட்சிகளும் உடன்பாடு காணுமிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றார் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

இந்த சந்திப்பில் ஈ பி ஆர் எல் எவ் கட்சியைந் சேர்ந்த சுரேஷ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கலாநிதி சர்வேஸ்வரன்,துரைரட்ணம் ஆகியோரும் ரெலோவைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீகாந்தா, கென்றி மகேந்திரன், ஜெனா உள்ளிட்டோரும்,தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரும் புளொட்டைச் சேரந்த ஆர் ஆர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.