செய்திகள்

‘புரொன்ட்லைன்’ சஞ்சிகைக்கு இலங்கையில் தடை? பிரபாகரன் பற்றிய கட்டுரையால் நடவடிக்கை!!

சென்னையிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில அரசியல் சார்ந்த சஞ்சிகையான புரொன்ட்லைன் சஞ்சிகையில் பெப்ரவரி 6 ஆம் திகதிய இதழ் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.

புரொன்டலைன் சஞ்சிகை 30 வருடத்தை பூர்த்தி செய்வதை முன்னிட்டு விஷேட இணைப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களும் இடம்பெற்றுள்ளன. பிரபாகரன் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அட்டைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

இதனையடுத்தே சஞ்சிகையை இலங்கையில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் இதனையிட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், கொழும்பு விமான நிலையத்திலிருந்து சஞ்சிகையை விற்பனைக்காக கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஊடக சுதந்திரம் மற்றும் தகவலறியும் உரிமை பற்றி சொல்லிக்கொள்ளும் புதிய அரசாங்கம் இதனைத் தடை செய்திருப்பது குறித்து ஊடகத்துறையினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.