செய்திகள்

புறக்கோட்டை டாம் வீதி சந்தேகநபர் சடலமாக மீட்பு

புறக்கோட்டை டாம் வீதியில் பெண்ணொருவரின் உடலுடன் மீட்கப்பட்ட சூட்கேசை குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டுவந்தவர் பொலிஸ்உத்தியோகத்தர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 52 வயதுடைய ஓய்வுபெற்ற துணை பொலிஸ் அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் படல்கும்புர, ஐந்தாம் கட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் காட்டுப் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.(15)