செய்திகள்

புற்றுநோயுடன் 2 ஆவது தடவையாக போராடியும் சினிமாவை கைவிடாத மம்தா

மம்தா மோகன்தாஸ் அவர்கள் தமிழ்ச் சினிமாவில் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்தவர். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். கோலிவுட் அவரை கண்டுகொள்ளாவிட்டாலும் மல்லுவுட் கைவிடவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்கின.

இந்நிலையில் 2 ஆவது முறையாக அவருக்கு புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டன. மனம் தளராமல் மீண்டும் தன்னை சிகிச்சைக்கு உட்படுத்திக் கொண்டார். சிகிச்சையின் பாதிப்பால் தலைமுடி கொட்டியது. குட்டையாக வெட்டிக் கொண்டார்.

இந்நிலையிலும் அவரை இயக்குனர் ஷஃபி, தான் இயக்கும் புதிய மலையாள படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். மார்க்கெட் இருந்தால் தான் வாய்ப்பு, கவர்ச்சி காட்டினால்தான் சான்ஸ் என்ற கமர்ஷியல் சிந்தனை கோலிவுட்டில் நிலவுகிறது.

எனவே மம்தாவின் நடிப்புக்கு முக்கியத்துவம் தந்து வாய்ப்புகள் தருமா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கணவரை பிரிந்துவிட்ட நிலையில், சினிமாவை மட்டுமே நம்பி இருப்பதாகவும் நோய் பாதிப்பை தாண்டி சினிமாவில் தொடர்வேன் என மம்தா நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.