செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சையை ஒத்தி வைக்க தீர்மானமில்லை : கல்வி அமைச்சர்

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை ஒத்தி வைப்பது தொடர்பாக இது வரையில் எந்தவித தீரமானமும் எடுக்கப்படவில்லையென கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைதெரிவித்துள்ளார்.
இதேவேளை க.பொ.த உயர்த்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடக்கும் என்பதுடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 30ஆம் திகதிக்குள் வெளிவருமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)