செய்திகள்

புலம்பெயர் உறவுகள் வீடுகளில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உயிரைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் -செல்வம் அடைக்கலநாதன்

இலங்கை அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும், புலத்தில் இருந்து தாயகத்தில் மக்களுக்காக பல்வேறு வகையில் குரல் கொடுத்து சர்வதேசத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தவர்கள் எமது புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள்.இந்நிலையில், புலம்பெயர்ந்த உறவுகள் முடிந்த அளவு தமது வீடுகளில் இருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து உயிரைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.புலம்பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாகப் பார்க்கின்றோம். எனவே புலம்பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஈழத் தமிழ் மக்களுக்குப் பாரிய அளவில் உதவிகளையும், ஆதரவுகளையும் வழங்கிய புலம்பெயர்ந்த எம் உறவுகள் தற்போது உலகத்தையே ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர்.உயிரிழந்த எம் உறவுகளுக்கு இதய அஞ்சலியை செலுத்துவதோடு பாதிக்கப்பட்ட உறவுகள் நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.(15)