செய்திகள்

புலம்பெயர் தமிழர்களை சந்திக்க அரசாங்கம் தீர்மானம் : கொழும்பில் நிகழ்வென்றை நடத்தவும் எதிர்பார்ப்பு

நாட்டின்  அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் வெளிவிவகார அமச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்த அமைச்சின் பேச்சாளரான மகேஷினி கொலன்னவே இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க விடயங்கள் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மற்றைய புலம்பெயர் தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்துமாறு ஜனாதிபதி அலோசனை வழங்கியுள்ளார். இதன்படி அரசாங்கம் இன பேதமின்றி சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளது.
இதற்கிணங்க சகல புலம்பெயர் இலங்கையர்களும் கலந்துக்கொள்ளும் நிகழ்வொன்றை நடத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும்.  என அவர் தெரிவித்துள்ளார்.