Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர் நினைவு நிகழ்வு

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர் நினைவு நிகழ்வு

அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தியமையால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையிலும் தற்போதும் பல அழுதங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும்அர்ப்பணிப்போடும், தாயகத்திலிருந்து ஊடகப்பணியாற்றிவரும் ஆறு ஊடகப்பணியாளர்களுக்கு அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் St.Alphage Church Hall, 33 Millfield Road, Burnt Oak, HA8 0DF எனும் முகவரியில் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ம் திகதி (10-12-2016) சனிக்கிழமை மதியம் 1:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கு அனைத்து ஊடகத்துறைசார் பணியாளர்கள், சமூகப்பிரதிநிதிகள், தமிழ் சமூக கட்டமைப்புப்பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

தொடர்பு: சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ( 078 1011 6032 / 07585 978377 , 07424 883468 / 07723 333205)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *