Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரித்தானிய தமிழ் மக்களுக்கான தொழிற்கட்சியின் எழுத்துமூல செய்தி: சுயநிர்ணய உரிமை, சர்வஜன வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு

பிரித்தானிய தமிழ் மக்களுக்கான தொழிற்கட்சியின் எழுத்துமூல செய்தி: சுயநிர்ணய உரிமை, சர்வஜன வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு

எதிர்வரும் பிரித்தானிய பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு செய்தி ஒன்றை விடுத்துள்ள தொழிற்கட்சி சுயநிர்ணயத்துக்கான உரிமையையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக தமது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதன் உரிமையையும் அங்கீகரித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் ஐ நா தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கும் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படுவதற்கும் தனது முழுமையான ஆதரவை தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பட்சத்தில் சிறிலங்காவுக்கான ஆயுத விற்பனை நிறுத்தபப்டும் என்றும் உறுதியளித்துள்ள தொழிற்கட்சி இனிமேல் பல்கலைக்கழகங்களில் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை செலவுசெய்யாமல் மாணவர்கள் இலவசமாக படிப்பதற்கும் ஆவண செய்துள்ளது. தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய மேலும் பல விடயங்கள் இந்த செய்தியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் 1983 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட நாள் முதல் தொடர்ச்சியாக குரல்கொடுத்து தமிழ் மக்களுடன் இணைந்து போராடிவரும் ஜெரமி கோர்பின் தலைமையிலான தொழில் கட்சியை வெற்றிபெற செய்வதன் மூலம் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் பெரும் நன்மைகளை பெறமுடியும் என்பது சுட்டிக்காட்டப்பட்டியுள்ளது.

இது தொடர்பில் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுளார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானிய பொதுத் தேர்தல் 2017

அன்பான தமிழ் மக்களுக்கு,

ஜுன் எட்டாம் திகதி நடைபெறவிருக்கிற பிரித்தானியத் தேர்தலில் வாக்குரிமையுள்ள நீங்கள் அனைவரும் வாக்களிப்பதன் மூலமே மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்யமுடியும்.

1983ம் ஆண்டில் முதற்தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இன்றுவரை தனது 34 வருட அரசியற் பயணத்தில் எப்போதுமே சரியான பக்கம் நின்றுவருபவரும், உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்து வருபவருமான ஜெரமி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி இருக்கும்போது யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்திற்கு இடமில்லை.

தமிழ் மக்களாகிய உங்களுக்கு ஜெரமி கோர்பினை அறிமுகப்படுத்தவேண்டிய அவசியமில்லை. லண்டனில் நடைபெற்ற உங்களின் அத்தனை போராட்டங்களிலும் அவரை நீங்கள் கண்டிருப்பீர்கள், உங்களில் பலர் அவருடன் உரையாடியிருப்பீர்கள். உங்கள் புகலிட விண்ணப்பம் தொடர்பில் அவரது உதவியினைப் பெற்றிருப்பீர்கள். உதவிகோரியபோதெல்லாம் மறுக்காது உதவிய ஒரு தோழனை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் உருவாகும் தருணம் இப்போது வாய்த்திருக்கிறது. அதனை சாத்தியமாக்குவது உங்களுடைய வாக்குகளிலும் தங்கியிருக்கிறது. இதுவரை காலமும் எங்களின் பக்கமிருந்த அவருடைய பக்கத்தில், இப்போது நாம் நிற்போம். அவரது தலைமையிலான தொழிற்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம்.

ஈழத்தமிழ் மக்கள் தொடர்பில் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பினின் நிலைப்பாடு என்ன?
– தொழிற்கட்சி அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை எமது வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையாக வைத்திருக்கும்.
– ராஜதந்திரம் மற்றும் முரண்பாடுகளுக்கான தீர்வு ஆகியவை பூகோள ரீதியில் பிரித்தானியாவின் தலைமைத்துவத்தை வழிநடத்தும்.

இதன் அர்த்தம், முரண்பாடுகளினால் கடந்த காலங்களில் பிளவுபட்டுள்ள சமூகங்களை ஒன்றிணைப்பதற்கு முயற்சிக்கும் நாடுகளுக்கு முடிந்தளவு ஆதரவளிப்பது எமது கடமையாகும். இன்று, பிரித்தானியாவில் இருக்கின்ற ஏராளமான தமிழ் மக்களுக்கு உள்நாட்டு யுத்தம் தொடர்பிலான நேரடியான அனுபவம் இருக்கிறது. உண்மையில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட மோசமான துன்பங்கள் முதலில் பிரித்தானியாவில் புகலிடம் கோருவதற்கு இட்டுச்சென்றது. நாம் எப்பொழுதுமே அடக்குமுறை காரணமாக தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கான சர்வதேச கடமையை ஏற்று நடப்போம். அத்துடன் பலவந்தமாக நாடுகடத்தபப்டுவதன் காரணமாக அகதிகள் ஆபத்தில் விடப்படாதிருப்பதையும் நாம் உறுதிசெய்வோம். இன்றும் கூட இலங்கை அதிகாரிகளினால் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதை நாம் அடிக்கடி அறிக்கைகளில் பார்க்கிறோம். சித்திரவதையை ஒரு பொதுவான நடைமுறையாக ஒருபோதுமே சகித்துக்கொள்ள முடியாது என்று ஐக்கிய நாடுகள் விபரிக்கின்றது. ஆகவே இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கு உட்படுத்தப்படவேண்டும்.

தொழிற் கட்சியானது மனித உரிமைகள் சபையினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் தொடர்ச்சியான பற்றுறுதியை வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்மானமானது உண்மையான ஒரு திருப்புமுனையாகும். போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து, சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி தண்டிக்கும் பொருட்டு நேர்மையான சுயாதீனமான விசாரணை மன்று அமைக்கபப்டுவதை விதந்துரைக்கிறது. இதனை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கப்படும்.

தொழிற்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் நீதி நிலைநாட்டம்படுவதை உறுதி செய்வதற்கும் அது நிலைநாட்டப்படுவதை காட்டுவதை உறுதிப்படுத்துவதற்கும் கடப்பட்டுள்ளது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். சுயநிர்ணயத்துக்கான உரிமையையும் சர்வஜன வாக்கெடுப்பு உள்ளடங்கலாக ஜனநாயக வழிமுறைகள் ஊடாக ஒருவர் தனது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதையும் நாம் முழுமையாக ஆதரிக்கிறோம்.

மனித உரிமைகள்,சர்வதேச சட்டம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை நிலைநிறுத்தும் அமைதி வழியிலான தீர்வு ஒன்றை கொண்டுவருவதற்கு நாம் ராஜதந்திர வழிகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். அதனால், சர்வதேச சட்டம் மீறப்படுவதற்கு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்ற நிலைமை இருக்கின்ற நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது உட்பட ஆயுத வியாபார உடன்படிக்கைகையை தொழிற்கட்சி அரசாங்கம் மிகவும் உயர் தரத்தில் கடைப்பிடிக்கும்.

கல்வி
பல்கலைக்கழகக் கல்வி இலவசம். தொழிற்கட்சி வெற்றியீட்டி ஆட்சி அமைக்கும் பட்சத்திலிருந்து வரும் செப்ரெம்பர் மாதத்திலிருந்து பல்கலைகழகத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்கள் கட்டணம் எதனையும் செலுத்தாமல் கல்வியைத் தொடரமுடியும்.

தேசிய சுகாதர சேவை (NHS)
நிதி நெருக்கடியில் அவதியுறும் தேசிய சுகாதார சேவைக்கு 30 பில்லியன் பவுண்ஸ்க்கு குறையாத தொகை ஒதுக்கப்படும். இதனால் வைத்தியசாலை அனுமதி பெற நீண்டநாள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

வேலைவாய்ப்பு
-ஒப்பந்தம் எதுவுமின்றி வேலை வழங்கும் முறை (Zero Hours Contract) நிறுத்தப்படும்.
– 2020 ஆண்டில் ஆகக்குறைந்த ஊதியம் மணித்தியாலத்திற்கு பத்து பவுணஸ் ஆக உயர்த்தப்படும்.
– தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிசெய்யப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும்
– மேலதிகமாக நான்கு பொது விடுமுறை நாட்கள் வழங்கப்படும்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதிகள்
குளிர்கால எரிபொருள் கொடுப்பனவு (Winter fuel allowance) மற்றும் இலவச பேருந்து அனுமதி என்பன அனைவருக்கும் உறுதி செய்யப்படும்.

ஓய்வூதிய கொடுப்பனவுகள் பணவீக்கத்திற்கு ஏற்றவகையில் ஆக்க்குறைந்த்து 2.5 சதவீதமாக வருடாந்தம் அதிகரிக்கப்படும்.

Download (PDF, 174KB)


One thought on “பிரித்தானிய தமிழ் மக்களுக்கான தொழிற்கட்சியின் எழுத்துமூல செய்தி: சுயநிர்ணய உரிமை, சர்வஜன வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு

  1. NARENDRAN

    WE LIKE LABER POLICY ABOUT SRI LANKA TAMIL SEF DETAMINATION NORTH EAST RAFADAM TO SEPARATE STATE FOR TAMIL ELAMIN TAMILS VERYGOOD POLICY FORLABOUER

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *