நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரும் வகையிலும், ஐ. நா மனித உரிமை சபை தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமை எடுத்துக்கூறும் வகையிலும் அத்துடன் ஐ. நா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுமே இந்த தொடர் உண்ணாவிதர போராட்டம் நடத்தப்படுவதாக நாடுகந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் ஆதரவு தேடும் (advocacy) குழுவின் உறுப்பினர் ஷோபனா ஜீவரட்ணம் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அதனை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.