செய்திகள்

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன்

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)