புலம்பெயர் நாடுகளில் நாட்டுக்கூத்துக் கலை எதிர்கொள்ளும் சவால்கள் : ஆனந்தன் – பாரிஸ்
ஈழத்தமிழ் இனத்தின் அடையாளத்தை அரசியிலில் மாத்திரம் தேடாமல் எமது கலை பண்பாட்டுத் தளங்களில் நின்றும் தேட வேண்டிய அவசியம் இருக்கின்றது. எமது கலை வேர்களுக்குள் தேசிய அடையாளமாக எமக்கு காணக்கிடைப்பது நாட்டுக்கூத்துக் கலையே. ஈழத்தமிழ் பிரதேசம் எங்கும் பரவிக் கிடக்கும் நாட்டுக் கூத்துக் கலையின் பிரதேச ரீதியான ஆட்டவடிவங்களையும் பாடல் வகைகளையும் மீட்டெடுத்து மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவரும் மன்னார் பாங்கு நாட்டுக்கூத்து கலைஞர் ஆனந்தன் செபமாலை அவர்கள் புலம்பெயர் தேசத்தில் நாட்டுக்கூத்துகள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பேசுகிறார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=SjUkTEPF-x8&feature=youtu.be” width=”500″ height=”300″]