செய்திகள்

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டில் விற்கப்பட்டதா? சி.ஐ.டி. விசாரணை

கடந்த காலத்தில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு ஆயுத குழுக்களுக்கு விற்கப் பட்டதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மோசடி தடுப்பு விசாரணை குழுவும் சி.ஐ.டி.யும் விசாரணை நடத்துவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், உக்ரேன் இலங்கை தூதுவர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கிய விடயம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அவரை தேடி வருகிறோம். இது குறித்து யுக்ரேன் அரசு எமக்கு அறிவித்துள்ளது.

இலங்கையிலும் அண்மையில் ஆயுதக் கப்பல்கள் பிடிக்கப்பட்டன. வேறு நாட்டு அரசாங்கங்களுடன் ஆயுத கொடு க்கல் வாங்கல் செய்ததாக கோடாபய கூறியிருந்தார். நைஜீரியாவுக்கு ஆயுதம் வழங்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால், நைஜீரிய போகோஹராம் அமைப்பிற்கு ஆயுதம் வழங்கியதாக சந்தேகம் இருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதம் மற்றும் நகைகளுக்கு என்ன நடந்தது என தகவல் கிடையாது.

இவை வேறு நாட்டு ஆயுத குழுக்களுக்கு கடல் நடுவில் வைத்து விற்கப்பட்டதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சி.ஐ.டி. மோசடி தடுப்பு விசாரணை குழு என்பன விசாரணை நடத்தி வருகிறது.

யுக்ரேன் தூதரக ஊழியரின் மரணம் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. அவரது பிரேத பரிசோதனை கிடைக்கும் வரை காத்திருக்கிறோம்.