செய்திகள்

புலிகளின் சீருடை, தொப்பி வைத்திருந்தார்களாம்: கைதடியில் இருவர் கைது

விடுதலைப் புலிகளின் சீருடை, தொப்பி மற்றும் ஜெக்கட் வைத்திருந்த இரு இளைஞர்கள் நேற்று கைதடி வீடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதடி மேற்கு வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தொப்பிகள், புலிகளின் சீருடையொன்று, ஜெக்கட் என்பன இருப்பதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே இவை கைப்பற்றப்பட்டன.

முல்லைத்தீவு வள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைரும், கைதடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.