செய்திகள்

புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குகின்றது: அமெரிக்கா

இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கையில் எவ்வித தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.