செய்திகள்

புலிகள் இயக்கத்தின் பிராந்தியத் தளபதிகள் சிலர் கைதுசெய்யப்பட்டது ஏன்?

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்தியத் தளபதிகள் சிலர் கைதுசெய்யப்பட்டமை யாழில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக  என  பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில்  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

n10