செய்திகள்

புலிகள் முகாமை உறுதிப்படுத்த முடியாது: இலங்கைக்கு கூறியிருந்த தென்னாபிரிக்கா

பிரபாகரன் மரணமடைந்தும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டும் கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைக்கு தென்னாபிரிக்காவில் இலங்கை புலனாய்வு முகவரமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. புலி உறுப்பினர்கள் 2010 மேயில் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாமை வைத்திருந்தார்களா என்பது பற்றிய விசாரணைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியா, கனடா, பிரிட்டனிலிருந்து ஆட்கள் பயிற்சிக்காக அங்கு செல்வதாக சந்தேகிக்கப்பட்டிருந்தது. ஆயினும் தென்னாபிரிக்க புலனாய்வுத் துறையினர் அதனை அச்சமயம் நிராகரித்திருந்தனர். அந்த விடயம் தொடர்பாக தகவலை உறுதிப்படுத்த முடியாது என அவர்கள் தெரிவித்திருந்தனர். 1998 தொடக்கம் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறு நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

உலகளாவிய ரீதியல் புலனாய்வு முகவரமைப்புகளின் உளவுக் கோப்புகளின் ஓர் அங்கமாக இரகசிய புலனாய்வு கேபிள் காணப்பபடுகிறது. அதனை அஸ்ஜஸீராவின் ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசை கசிய விட்டிருந்தது.

2010 ஜீன் 9இல் தென்னாபிரிக்காவின் அரசாங்கப் பாதுகாப்பு முகவரமைப்பு (எஸ்.எஸ்.ஏ) வெளிவிவகார இணைப்பு தலைமைத்துவத்துக்கு பின்வரும் விடயத்தை கூறியிருந்தது. 2010 மேயில் தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சி முகாம் இருப்பதாகவும் அவுஸ்திரேலியா, கனடா, பிரிட்டனிலிருந்து தனிப்பட்ட ஆட்கள் அங்கு சமுகமளித்திருக்கலாம் என்று தங்களின் சேவையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலை எமது சேவைத் துறையினர் உறுதிப்படுத்த முடியாதென தென்னாபிரிகாவின் பாதுகாப்பு முகவரமைப்பு தெரிவித்திருந்தது.

அதேசமயம் தென்னாபிரிக்காவிலுள்ள தமிழ் அமைப்புக்களை எஸ்.எஸ்.ஏ புகழ்ந்திருந்தது. தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மேம்படுத்துவதில் சுறுசுறுப்புடன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பல்வேறு கலாசார மற்றும் ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாகவும் எஸ்எஸ்.ஏ.பாராட்டியிருந்தது. அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு நிதி திரட்டல் முன்முயற்சிகளில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கையில் தென்னாபிரிக்காவிலும் உள்ள அகதிகள், அநாதைகள், விசேட தேவையுடையோர், வீடற்றோர், சிறப்புரிமை அற்றவர்களுக்கு நிவாரணத்தை வழங்க நிதி சேகரிக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியிருந்தது.

கடந்த வருடம் தமிழ் அமைப்புகள் காலத்துக்கு காலம் சமாதான எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியதாகவும் தென்னாபிரிக்க புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டிருந்தது. அந்த நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக குரலெழுப்புவதற்கு பாரிய விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தன. எவ்வாறாயினும் அவர்களின் முழுக் கவனமும் இலங்கை பற்றியதாக அமையவில்லை. ஏனைய நாடுகளின் மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் அவை அமைந்திருந்தன என்றும் கேபிள் இல் குறிப்பிட்டடிருந்தது.

எவ்வாறாயினும் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய நாடுகளிலுள்ள அமைப்புக்கள் தென்னாபிரிக்காவிலுள்ள உள்ளுர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டிருதாக அந்த நாட்டின் புலனாய்வுத் துறை தெரிவித்திருந்தது. அத்துடன் அந்த ஒத்தழைப்புகள் மற்றும் பிணைப்புக்களின் தன்மை தொடர்பாக அதிகளவில் தெளிவற்றதாக இருப்பதாகவும் புலனாய்வுத் துறை குறிப்பிட்டிருந்தது.