செய்திகள்

‘புலிப் பார்வை’ இந்திய தேசிய வாதத்துக்கு எதிராணதல்ல: இயக்குனர் கூறுகிறார்

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பான திரைப்படம் இந்திய தேசியவாதத்திற்கு எதிரானதல்ல என அப்படத்தின் இயக்குனர் கூறுயிருக்கிறார்.

‘புலிப் பார்வை’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்படம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டமையை மையப்படுத்தியதாக அமைந்திருக்கிறது. எதிர்வரும் 14 ஆம் திகதி இப்படம் திரையிடப்படவுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் வளர்ச்சி பற்றியதாக இப்படம் அமைந்திருப்பதுடன் இலங்கை இராணுவத்தினால் அவரின் 12 வயது மகன் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் காட்சிகளையும் கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் ஆகஸ்டில் வெளியிடப்படவிருந்தது. ஆயினும் புலிகள் சார்பு செயற்பாட்டாளர்களால் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது.
2
விடுதலைப் புலிகளை தாழ்வான நிலையில் இத்திரைப்படம் உருவகப்படுத்தியிருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அத்துடன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பாக இருப்பதால் இந்தப் படம் இந்தியாவிற்கு எதிரானது என குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தியிருக்கும் இயக்குனர் பிரவீன் காந்தி ‘நாங்கள் இந்தியாவை நேசிக்கின்றோம் ‘ என்ற கருப்பொருளை இப்படம் கொண்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை கொச்சியில் வைத்து நிருபர்களிடம் கூறியதாக ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

இப்படத்தை வெளியிடுவதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை தூண்டுவதற்கான முயற்சி எதுவும் இங்கு இல்லையென பிரவீன் காந்தி கூறியுள்ளார். இலங்கையிலுள்ள தனது தமிழ் சகோதரர்களின் விடுதலைக்காக பிரபாகரன் எவ்வாறு போராடினார் என்பதை காட்டுவதாக மட்டுமே இப்படம் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனை எப்போதுமே எதிர்மறையான பாத்திரமாக காண்பித்துவந்த நிலையில் நேரான விதத்தில் அவரை உருவகப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக இப்படம் அமைந்திருப்பதாக பிரவீன் காந்தி கூறியுள்ளார்.
04-2
‘அத்தகைய சம்பவங்கள் பல இலங்கையில் இடம்பெற்றிருந்தன. அந்த சம்பவங்களாலேயே வன்முறையை பிரபாகரன் எடுத்துக் கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். தமிழர்களுக்கு சுதந்திரத்தை வலியுறுத்தும் அதேவேளை வன்முறையை எடுத்துக் கொள்ள இத்தகைய சம்பவங்கள் அவரை நிர்ப்பந்தித்திருந்தன. இந்தப் படத்தை வெளியிடுவதால் தமது கோட்பாடுகளும் அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்படுமென அரசியல் கட்சிகள் பீதியடைந்துள்ளன. அதனாலேயே இத்தகைய திரைப்படங்களுக்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்’ என்று பிரவீன் காந்தி கூறியுள்ளார்.

சிறுவர் போராளிகளை உருவகப்படுத்தியிருப்பதாக இந்தத் திரைப்படம் தொடர்பாக விமர்சிக்கப்பட்டிருந்தது. அதனால் திரைப்படத்திலிருந்து குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்குவதற்கு இயக்குனர் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். ஆயினும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிரான வேண்டுகோளை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறுவர்கள் தினத்தில் இத்திரைப்படம் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் வெளியிடப்படவுள்ளது.
21TH_VASAN_1060397f
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களும் அவரின் மரணம் தொடர்பான பிரதிமையும் இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கான தூண்டுதலை தனக்கு அளித்திருந்ததாக பிரவீன் காந்தி கூறியுள்ளார். இத்திரைப்படத்தின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு இலங்கையில் படக்காட்சிகள் எடுக்கப்படவில்லை. கேரளாவின் சில பகுதிகளில் படத்தை எடுப்பதற்கு இயக்குனர் செயற்பட்டிருந்தார். இலங்கை மற்றும் கேரள மக்கள் பலவிதத்தில் பொதுவான கலாசாரத்தை கொண்டுள்ளனர். அதனாலேயே படத்தில் பல மலையாளிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான ஒற்றுமைத் தன்மையே இதற்கு காரணமாகும் என்று பிரவீன் காந்தி தெரிவித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை எஸ். மதன் தயாரித்துள்ளார். அவரே பிரபாகரனின் பாத்திரத்தை வகிக்கின்றார். பிரபாகரனின் மகனாக சத்தியதேவ் நடித்துள்ளார் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.