புலி ஆதரவாளர் என தமார குணநாயகம் மீது மங்கள குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகளின் ஆதாரவாளர் என தன்மீது குற்றச்சாட்டை முன்வைத்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
இனவாத- தமிழ்எதிர்ப்புமனப்பான்மையை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டாதவர்களை அப்புறப்படுத்தலாம் என வெளிவிவகார அமைச்சர் நினைப்பது பலவீனமான விடயம், நாட்டின் நற்பெயருக்கும் அது களங்கத்தை ஏற்படுத்தும்
இவ்வாறான ஒருவர் வெளிவிவகார அமைச்சராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என்றும் இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வெளிவிகார அமைச்சர் மங்களசமரவீர என் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே நான் இந்த செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
17 ம் திகதி சுவர்ணவாஹிணியின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் என்மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவரிடம் ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதரகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை மற்றும்தாய்லாந்திற்கான தூதுவராக சேனுஹா செனிவரத்தின நியமிக்கப்பட்டமை குறித்துதொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் என்மீது குற்றசாட்டுகளை சுமத்தியுள்ளார்..
குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக அவர் நான் விடுதலைப்புலிகள் சார்பில்1989-90 களில்ஐக்கிய நாடுகளிலும்இமனித உரிமை பேரவையிலும் தோன்றியவர் என குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலைப்புலிகள் சார்பு உலக திருச்சபைகளின் பேரவை என்றஅமைப்பின் உறுப்பினர் நான் எனவும் நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர தனக்கு மாத்திரதம் தெரிந்தகாரணங்களுக்காக என் மீது சேற்றை வாரியிறைக்கின்றார்.பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்.
நான் ஓரு தமிழ் பிரஜை என்ற காரணத்திற்காக என்னை விடுதலைப்புலிகளுடன் சேர்த்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நான் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்சார் வாழ்க்கையிலும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளேன்.
அமைச்சர் என்மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவில்லை.
அமைச்சர் எந்த வாக்குறுதிகளுக்காக மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவுசெய்தார்களோ அந்த வாக்குறுதியை கைவிட்டுள்ளது மிகவும் கவலையளிக்கின்றது.
கணக்காய்வாளர் திணைக்களத்தினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள விடயங்களை வெளிவிவகார அமைச்சர் மிகவும் சாதரணமாக அலட்சியம் செய்வது அதிhச்சியளிக்கின்றது.
அரசாங்கம் தனது 100 நாள் திட்டத்தின் 70 நாட்களில்பின்பற்றும் நல்லாட்சி இதுவென்றால் மக்கள் இவர்கள் குறித்து எச்சரிக்கையாகயிருக்கவேண்டும்.
வெளிவிவகார அமைச்சர் பொய்சொல்பவர் என்பதால் நாடு தனது நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் இழப்பது குறித்து முன்னனாள் தூதுவர் என்ற வகையில் நான் அதிர்ச்சியடைகிறேன்
இனவாத- தமிழ்எதிர்ப்புமனப்hன்மையை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டாதவர்களை அப்புறப்படுத்தலாம் என வெளிவிவகார அமைச்சர் நினைப்பது பலவீனமான விடயம்இ நாட்டின் நற்பெயருக்கும் அது களங்கத்தை ஏற்படுத்தும்
இவ்வாறான ஒருவர் வெளிவிவகார அமைச்சராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.