செய்திகள்

புஸ்ஸல்லாவ விபத்து – இருவர் பலி

நேற்று (02.05.2015) இரவு 7.00 மணியளவில் புஸ்ஸல்லாவ ஹெல்பொடகம பிரதேசத்தில் கண்டி பிரதேசத்திலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம் ஒன்று கட்டுகித்துல பிரதேசத்திலிருந்து கொத்மல்கம பிரதேசத்திற்கு 05 பேருடன் சென்ற முக்கக்கரவண்டியில் மோதியதில் எஸ்.ஜி.சுதுஅக்குருகெதர சார்லிஸ், கொடகும்புரேகெதர ஆரியசிங்க ஆகிய இருவர் மரணமார்கள்.

இறந்த ஒருவரின் சடலம் கொத்மலை வைத்தியசாலையிலும் மற்றவரின் சடலம் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூவரில் 02 பேர் கம்பளை வைத்தியசாலையிலும் ஒருவர் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிப்பர் வாகனம் ஒட்டுனர் புஸ்ஸல்லாவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளான வாகனங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெயரத் தலைமையில் மேற்க் கொள்ளப்பட்டு வருகின்றன.