செய்திகள்

பூகம்பத்தில் சிக்குண்டுள்ள எவரையும் உயிருடன் மீட்கும் சாத்தியமில்லை என்கிறது நேபாள அரசு

நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6600 என்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், காணாமல் போயுள்ள ஆயிரக்கனக்கனவர்களின் நிலைமை என்னவென்று தெரியாது. இந்த நிலையில் உயிர் தப்பி இருப்பவர்களை கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று நேபாள அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

” மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் எம்மால் முடிந்தளவுக்கு செய்கிறோம். ஆனால் எவரும் உயிர் தப்பி இருப்பதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை” என்று நேபாளத்தின் உள்துறை அமைச்சின் பேச்சாளர் லஷ்மி பிரசாத் டக்கால் தெரிவித்தார்.

இந்த நிலையில் பலியானவர்களின் எணிக்கை பெரிதும் உயர்வடையலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மலைப் பிரதேச கிராமங்களான டஹாடிங், ரசுவா மற்றும் சிந்துபல்கொக் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக சென்றடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 3 4