செய்திகள்

பூண்டுலோயாவில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

நுவரெலியா பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட தாயின் மகனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பெச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிகாலை 52 வயதுடைய ஆண்டி பேச்சாய் என்ற தாயும் 32 வயதுடைய பெரியசாமி நித்தியகல்யாணி எனும் மகளும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த தாயின் மகன் தலைமறைவாகியிருந்ததுடன் அவரை தேடி பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யபப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.