செய்திகள்

பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்த ஹைதராபாத் அணித்தலைவர் வார்னரின் ‘பெரும் தவறு’

ஹைதராபாத் அணித்தலைவர் வார்னர் செய்த தவறு மற்றும் கோலியின் ஆட்ட உதவியுடன் பெங்களூர் வெற்றிக்கனியை தட்டிப் பறித்தது.
மழை காரணமாக நேற்யை போட்டி11 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
நாணயசுழற்சியில் வென்ற ஹைதராபாத் அணி தலைவர் வார்னர் முதலில் துடுப்பபெடுத்தாட முடிவு செய்தார். தொடக்க ஆட்டகாரர்களாக வார்னரும் தவானும் களமிறங்கினார்கள்.
தவான் 8 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய மோசஸ் ஹென்ரிக்ஸ் வார்னருடன் சேர்ந்து பெங்களூர் பந்து வீச்சை சிதறடித்தார்கள். அந்த அணி 11 ஒவரில் 135 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 57 ஓட்டங்களையும் வார்னர் ஓட்டங்களையும் எடுத்தனர்.

ஆனால் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஒவர்கள் குறைக்கபட்டு பெங்களூர் அணி 6 ஒவரில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது. கெயில் 10 பந்துகளில் 35 எடுத்து ஆட்டதிழந்தார். அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு உருவாகியது..
warner catch

வேறு ஒரு துடுப்பாட்ட வீரரும் சரியாக ஆடாத நிலையில் கோஹ்லி மட்டும் தொடர்ந்து போராடியபடியே இருந்தார். கடைசி இரு பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அந்த ஒவரின் 5வது பந்தை தூக்கி அடித்தார் சிக்ஸ் போகும் என்று எதிர்பார்த்த நிலையில் எல்லை கோட்டு அருகே இருந்த வார்னர் அதை கேட்ச் பிடித்தார்.
ஆனால் கேட்ச் பிடித்த மகிழ்ச்சியில் எல்லைக்கோட்டை மிதித்துவிட்டார். இதனால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. பெங்களூர் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 44 ஓட்டங்கள் எடுத்த கோஹ்லி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். வார்னர் அதீத மகிழ்ச்சியால் செய்த தவறால் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது சொந்த ஊர் ஹைதராபாத் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.