செய்திகள்

பெண்கள் மீதான பாலியல் வன்முறையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டு வருகின்றமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும். நாடு பூராகவும் எல்லா சமூகத்தினர் மத்தியிலும் இந்த நிலைமையானது பயத்தையும் பீதியையும் ஏற்படுத்துவதாகவுள்ளது.

எனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்படுவோர் தீர விசாரிக்கப்பட்டு குற்றம் உறுதியாகும் பட்சத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படுதல் மூலமே இதனைத் தவிர்க்க முடியும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான பாலியல் வன்முறையானது நாட்டில் பாரிய அதிர்வு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர் பாலியல் வன்முறைகளுடன் கூடிய கொலைகளும் இடம்பெற்று வந்தமை அங்கு பெரும் பீதியை உருவாக்கியது.

அதேபோல வடமாகணத்திலும் தொடர்ச்;சியாக இடம்பெற்றுவரும் பாலியல் வன்முறைகளுடன் கூடிய கொலைகள் அங்கு வாழும் மக்களிடத்தில் ஒருவித பயத்தினையும் பீதியையும் தோற்றுவித்துள்ளது.

உறவினர்களாலும் அயலவர்களாலும் இந்த வன்முறை மேற்கொள்ளப்படுவதானது சமூக சீரழிவை ஏற்படுத்துவதாகவும் சமூக வாழ்வு சீர்குலைககக்படுவதாகவும் உள்ளது.

வித்யா படுகொலை நடந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளை கிளிநொச்சியிலும், ஊரணியிலும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை இடம்பெற்றிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

இந்த நிலைமைகளை தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாது. குற்றம் செய்ய எத்தனை பேர் மனதில் அந்த பயத்தினை உருவாக்குதன் மூலம் மாத்திரமே இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.