செய்திகள்

பெண்மனிதாபிமான பணியாளர்கள் விடுதலை

சிரியாவில் ஐந்து மாத காலத்திற்கு முன்னர் கடத்தப்பட்ட இத்தாலியின் இரு பெண் மனிதாபிமான பணியாளர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
கிரெட்டா ரமேலி ,வனெசா மசுலோ ஆகிய இருவரும் நேற்று ரோம் விமானநிலையத்திற்கு வந்துசேர்ந்த வேளை இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் அவர்களை வரவேற்றார்.
அவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை சிரியாவின் அலெப்பே பிராந்தியத்தில்வைத்து கடந்த யூலை மாதம் இவர்கள் கடத்தப்பட்டனர்.
இரு வாரங்களுக்கு முன்னர் சிரியாவிற்கான அல்ஹைடாவின் பிரிவான நுஸ்ரா முன்னணி இரு பெண் மனிதாபிமான பணியாளர்களையும் தான் கடத்திவைத்திருப்பதாக தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.