செய்திகள்

பெண் சட்டத்தரணிக்கு ஆபத்து

எகிப்திய நீதித்துறையின் பலவீனங்களை சுட்டிக்காட்டும் ஆவணமொன்றை தயாரித்தமைக்காக அந்த நாட்டின் பிரபல பெண்மனித உரிமை சட்டத்தரணி அமல் குளோனி கைதுசெய்யப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்திய அதிகாரிகள் இந்த மிரட்டலை விடுத்துள்ளனர்.
சர்வதே சட்டத்தரணிகள் சங்கத்திற்காக அவர் தயாரித்துள்ள ஆவணத்தை தொடர்ந்தே அவர் கைது செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அவர் எகிப்தின் நீதித்துறை சுதந்திரமானதாக காணப்படவில்லை, நீதித்துறையை விடவும் சட்டஅமைச்சு அதிகாரிகளே அதிக அதிகாரத்தை கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எகிப்திய நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ள அல்ஜசீரா ஊடகவியலாளர்கள் சார்பாகவும் அவர் ஆஜராகியிருந்தார்.