செய்திகள்

பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன்

தமிழ்த்திரையுலகில் இதுவரையில் 9 படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், தனது பத்தாவது படத்தில் பெண் வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கப் போகிறார்.

‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ போன்ற பெரிய படங்களுக்கு ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய சீன் புட் என்பவரை வரவழைத்து சிவகார்த்திகேயனை அழகுபடுத்தப் போகிறார்களாம்.

இது குறித்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் வெளியீட்டிற்குப் பிறகு ஊடகங்களுக்கு தெரிவிக்கும் திட்டத்தில் உள்ளார்களாம்.