செய்திகள்

பெண் வேட்பாளர்கள் 8 சதவீதம்

அசாம் சட்டசபை தேர்தலில், பெண்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வரும் நிலையில் அங்கு, 8.6 சதவீதம் மட்டுமே, பெண்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

அசாம் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல், ஏப்ரல், 4ல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல், நாளை மறுதினம் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலில், ஆண்கள், 81 சதவீதம் ஓட்டளித்த நிலையில், பெண்கள், 82 சதவீதத்திற்கும் அதிகமாகஓட்டளித்தனர்.ஆனால், சட்டசபை தேர்தலில் போட்டியிட, பெண்களுக்கு குறைந்த அளவே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் வேறுபாடின்றி, அனைத்து கட்சிகளும் குறைவான பெண்களையே களத்தில் இறங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, 2011 சட்டசபை தேர்தலில், 19 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியது. ஆனால், அக்கட்சியின் சார்பில் இந்த முறை, 16 பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

பா.ஜ., 2011 தேர்தலில், ஒன்பது பேரை நிறுத்திய நிலையில் தற்போது, ஆறு பேரை மட்டுமே வேட்பாளர்களாக ஆக்கியுள்ளது.அதன் கூட்டணி கட்சியான, போடோ மக்கள் முன்னணி, பெண்களுக்கான வாய்ப்பை, மூன்றிலிருந்து இரண்டாககுறைத்துவிட்டது.முக்கிய எதிர்க்கட்சியான, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஐந்து பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு தந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகளும், தலா ஒரே ஒரு பெண் வேட்பாளரைமட்டுமே நிறுத்தியுள்ளன.

பிரசாரம் ஓய்ந்தது:அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில், இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அசாமில், 61 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில், 31 இடங்களுக்கும், நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது. பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று, தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

N5