பெப்ரவரி 11 ஆம் திகதி மைத்திரி இந்தியா செல்வார்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதியளவில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். நான்கு நாட்கள் இந்தியாவின் தலைநகரில் அவர் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அரச விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கு அரச விஜயத்தை மேற்கொள்வாரெனத் தெரியவந்திருக்கின்றது.
மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுநடத்தப்படவுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் காணப்படும் அரசியல் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின்போது ஆராயப்படவுள்ளது.
மேலும் இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயததின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு அரச விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.