செய்திகள்

பெருந்தெரு துறையில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய விசேட குழு

கடந்த அரசாங்கத்தில் பெருந்தெருக்கள் அபிவிருத்தியின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தவென விசாரணை பிரிவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
பெருந்தெருக்கள் துறையின் மோசடிகளை தேடல் பிரிவொன்றை அமைக்கும் நோக்கில் பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹசீம்  முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை  பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
2011.01.01 ஆம் திகதி தொடக்கம் 2015.01.08 ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில் அக்கால அரசாங்கத்தின் மூலம் பாரியளவு நிதி போக்குவரத்து துறைக்கு முதலிடப்பட்டது.  அதன் மூலம் நிர்வாகம் தொழில்நுட்பம் நிதி மற்றும் ஏனைய முக்கிய விடயங்களில் அரசாங்கத்துக்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வதற்கும், அவ்வாறு இடம்பெற்று இருந்தால் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் அவ்வாறு இடம்பெறா வண்ணம் குறித்த வழிவகைகளை செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் செயற்படும் பெருந்தெருக்கள் துறையின் மோசடிகளை தேடல் பிரிவொன்றை அமைக்கும் நோக்கில் பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹசீம்  முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.