செய்திகள்

பெருந்தோட்டத்துறை ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சை பெறுபேறுகள் இரகசியமானது

பெருந்தோட்டத்துறை ஆசிரியர் உதவியாளர் போட்டி பரீட்சை பெறுபேறுகளின் புள்ளிகள் தொடர்பில் இரகசியத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சையின் புள்ளிகள் நேர்முகத் தேர்விற்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என பரீட்சார்த்திகளால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும்இ நேர்முகத் தேர்வு ஒன்றின் போது புள்ளிகள் வழங்கப்படுமாயின் அதற்கு முன்னதாக இடம்பெறும் எழுத்து மூல பரீட்சையின் புள்ளிகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துவருகின்றது.

இந்த விவாதங்களுக்கு மத்தியிலேயே பரீட்சைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தமானியின் 1589ன் கீழ் 30 – 77 வது சரத்தை கீழ்இ போட்டி பரீட்சையில் புள்ளிகள் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்டவர்கள் வெற்றிடங்களின் மூன்று மடங்கினர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

இதன் அடிப்படையிலேயே நேர்முகத் தேர்விற்கான அழைப்புகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரச நியமனத்திற்காக புள்ளிகள் வழங்குவதற்காக நடாத்தப்படும் எழுத்து மூல பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்படாமல் நேர்முகத் தேர்வு நிறைவு பெற்று மொத்த புள்ளிகள் வழங்கப்படும் வரை இரகசிய தன்மை பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளது.