செய்திகள்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளராக விஜயலட்சுமி நியமனம்

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வடக்குமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் முரண்பட்ட இவர், மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இவர் அந்தப் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் பத்திநாதன் நியமிக்கப்படவிருப்பதாகத் தெரியவந்துள்ளது.