செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு! ரணில் பங்கேற்பு (படங்கள்)

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டின் பொன் விழாவில் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப் பத்திரம் வழங்கும் வைபவம் 10.05.2015 இன்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றுதலோடு இடம்பெற்றது.

இதன்போது மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு காணி வழங்கும் ‘பசுமை பூமி’ காணியுறுதித் திட்டத்தின் கீழ் 375 வீடுகளுக்கான காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர்களான அர்ஜுனா ரணத்துங்க, தயா கமகே, ரவுப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ், இராஜாங்க அமைச்சர்களான இராதாகிருஷ்ணன், வேலாயுதம், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

DSC08848

DSC08850

DSC08852

DSC08854

DSC08860

DSC08862

DSC08864

DSC08869

DSC08878

DSC08883

DSC08889

DSC08891

DSC08893

DSC08898

DSC08902

DSC08905

DSC08952

DSC08962

DSC09050

DSC09066

DSC09073

DSC09075

DSC09077

DSC09083